Tuesday, 20 June 2017



அந்த காலத்திலேயே நதிகளை இணைத்த நம் பாண்டிய குல மன்னர்






அந்த காலத்திலேயே நதிகளை இணைத்த நம் பாண்டிய குல மன்னர்
உலகத்தில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு நம் குலமான சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கு உண்டு நம் சோழர் குலத்திற்கு அடுத்தாற்போல் புகழ் பெற்று விளங்கியது நமது மற்றொரு குலமான பாண்டியர் குலம் . ஒரு காலத்தில் மிக பிரம்மாண்டமாக இயங்கி கொண்டிருந்த நம் குமரிக் கண்டத்தை மண்ணின் மைந்தர்களான நம் குலமான சோழர்களும்
பாண்டியர்களும் சிறப்பாக ஆண்டனர் . அந்த காலத்திலேயே நதி நீர் இணைப்பு எவ்வாறு நடந்தது எதற்காக நடந்தது அதை எப்படி நடத்தி காட்டினார்கள் என்ற விடயத்தை நாம் பார்ப்போம் . மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் உருவாகிறது பரலை ஆறு அதே மலையின் மற்றொரு பகுதியில் உருவாகிறது பழையாறு . பரலை ஆற்றுடன் ஒப்பிடும் போது பழையாறு மிகவும் சிறியது . அதோடு கோடைக்காலங்களில் நீர் வளம் குறைந்து வறண்டு போனதால் அந்த ஆற்றின் நீரை நம்பியிருந்த நாஞ்சில் நாட்டு மக்கள் கடும் பஞ்சத்திற்கு ஆளாயினர் . அதே சமயம் கொஞ்சம் தூரத்தில் இருந்த பரலை ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் ஓடி கடலில் கலந்து கொண்டிருந்தது . இதைக் கண்ட நாஞ்சில் நாட்டு மக்கள் பரலை ஆற்று நீரை பழை ஆற்றுக்கு திருப்பிவிட்டால் எங்கள் பஞ்சங்கள் பறந்தோடி விவசாயம் செழிக்கும் என்று அப்போதைய நம் பாண்டியர் குலப் பேரரசரான இரண்டாம் இராசசிம்ம பாண்டியரிடம் கோரிக்கை விடுக்க மக்களின் அக்கோரிக்கையை ஏற்ற அரசர் இரு ஆறுகளையும் இணைக்கும் திட்டத்தை உருவாக்கினார் . அதன் படி கிபி. 7 ஆம் நூற்றாண்டில் இருபதடி உயரமுள்ள பெரும் பாறைகளை கொண்டு பழையாற்றின் குறுக்கே அணையை கட்டினார் . அதோடு மிகப்பெரிய பாறை குன்றுகளை குடைந்து கிட்டத்தட்ட பல மைல் தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு பழையாற்று நீர் பரலை ஆற்றுக்கு கொண்டு செல்ல பட்டது . அதன் பின்பு தான் நாஞ்சில் நாடு செழிப்பான நாடாக மாறியது . இதை பற்றிய தகவல்கள் திருவிதாங்கூர் ஆவண அறிக்கையில் இருக்கின்றன . ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாசனப் பொறியாளரான இருந்த ஆர்ஸ்லி இந்த கால்வாயை பற்றி பதிவு செய்கையில் பாண்டியன் வாய்க்கால்களை உருவாக்கியவர்களின் தொழில்நுட்பம் என்னை பிரமிக்க வைக்கிறது . இவர்களே எனது பாசன தொழில்நுட்ப ஆசான்கள் என்று பதிவு செய்திருக்கிறார். இந்த அணையை தொடர்ந்து பிற்கால பாண்டியர்கள் வே நாடு மன்னர்களால் பதிமூன்று தடுப்பணைகள் பழையாற்றில் கட்டப்பட்டன . இந்த அணைகள் அனைத்தும் பெரும் பாறைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து இணைப்பு பகுதியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி பெரும் வலிமையுடையதாக கட்டப்பட்டுள்ளது . இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நதிகளை இணைத்து ஆற்று நீரை பரிமாற்றம் செய்து நதி நீர் இணைப்பிற்கு அப்போதே பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றனர் நம் இனத்தவர் . அவர்களின் விஞ்ஞான வளர்ச்சியை என்னவென்று வியப்பது ! .
வாழ்கசேரர் சோழர்பாண்டியர் குலமான பார்க்கவ குலம் , வளர்கசேரர் சோழர்பாண்டியர் குலமான பார்க்கவ குலம் , வெல்கசேரர் சோழர்பாண்டியர் குலமான பார்க்கவ குலம்







Tuesday, 13 June 2017


பேரரசர் ராஜேந்திர சோழ உடையார்







மன்னர்களுக்கெல்லாம் மன்னர் மாமன்னர் பேரரசர் ராஜேந்திர சோழ உடையார் இளவரசானாக இருந்த போது ஏற்ப்பட்ட போர்

உலகத்தில் உள்ள பல்வேறு அரசர்களும் பேரரசர் ராஜேந்திர சோழ உடையார் என்ற பெயரை கேட்டாலே நடு நடுங்குவார்கள்

அப்பேற்பட்ட பேரரசர் இளவரசானாக இருந்த போது மிகப்பெரிய போர் நடந்தது. பேரரசர் ராஜேந்திர சோழ உடையார் பெரு வெற்றியும் பெற்றார்
அந்த போர் எதற்காக நடந்தது , அந்த போர் எப்படி முடிந்தது என்று பார்ப்போம்.
காவிரியின் வடகரையான கலியூரில் பெரும்படையோடு காத்திருந்தான் கங்க மன்னன். படையென்றால் சாதாரணமாக அல்ல. 18 தளபதிகள் கொண்ட மாபெரும் படை அது. ஒவ்வொரு தளபதியின் கீழும் ஆயிரக்கணக்கான வீரர்கள். தளபதிகளும் சாதாரணமானவர்கள் அல்ல.தாம் சென்ற போரில் வெற்றியை தவிர வேறு எதையுமே காணாதவர்கள் காவிரி ஆற்றின் வட கரையில் நின்றிருந்தது அந்த கங்கர் படை. மறு கரையில் உள்ள தழைக்காடு தான் கங்கர்களின் தலைநகரம். அதையும் கடந்தால் வரும் ஊர் தான் குடமலை நாடு.. சிறை வைக்கப்பட்டிருந்த ஒருவரை காக்கத்தான் இத்தகைய பெரும் படை

போர்க்களத்தில்:-
------------------------
.ஒருவன் புரவியில் வேகமாக வந்து அவன் கொண்டு வந்த தகவலை கங்க மன்னனிடம் சொன்னான், அதைக் கேட்டு சுற்றியிருந்த 18 தளபதிகளும் வாய்விட்டு சிரித்தனர்.  என்னையா இது வேங்கையை வேட்டையாடுவதாக கூறி எங்களை எல்லாம் அழைத்துவிட்டீர்கள் . இப்போது என்னவோ போருக்கு வருவது வேங்கையின் மைந்தனாமே . சிறுவன் அவனை எதிர்க்கவா நாங்கள் இத்தனை பேர் என எகத்தாளமாக கேட்டான் ஒரு தளபதி . நான் இதை எதிர்பார்க்கவில்லை . தனது தூதுவன் ஒருவரை சிறைபிடித்து வைத்தற்காக அந்த வேங்கையே களத்தில் நிற்கும் என நான் எண்ணினேன் . தூதுவனை சிறைபிடித்து வைத்திருப்பதென்னவோ நமது நண்பர் சேர மன்னர் பாஸ்கர ரவி வர்மர் என்றாலும் கூட நம்மை தாண்டி தான் அவரை தொட முடியும் என்பதனாலும் , நமது தலைநகரான தழைக்காட்டுக்கு எந்த வித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தினாலும் தான் இக்கரையிலேயே நான் அவர்களை எதிர்க்க துணிவு கொண்டேன் , அதோடு உங்களையும் அழைத்தேன் என்றான் கங்க மன்னன் . அதோடு நமது வீரன் கொண்டு வந்த செய்தியின் படி சோழர்களின் படைத்தளபதியாக அப்ரமேயன் சோழ உடையார் வருகிறான் .போருக்கு பொறுப்பேற்று வேங்கையின் மைந்தன் வருகிறான். இவர்களை வெல்வதற்கா இத்தனை பெரும்படை என்று எனக்கே சற்று அதிகமாகத்தான் படுகிறது என்ன செய்வது என்றான் கங்க மன்னன் .எதிர்பார்த்தது நடக்கவில்லை என கவலை வேண்டாம் அரசே . சேர மன்னர் தூதுவனை சிறைபிடித்தார் , நாம் வேங்கையின் மைந்தனையே சிறைபிடிப்போம் 18 தளபதிகள் கொண்ட பெரும் படை அவர்களை வீழ்த்த ஒரு பகல் கூட ஆகாது என்றான் இன்னொரு தளபதி. அதுவும் சரி தான் மைந்தனை மீட்கவாவது வேங்கை வந்து தானே தீர வேண்டும் என்றான் கங்க மன்னன் . இதைக் கேட்டு அனைவரும் எகத்தாளமாக சிரிக்க ஆரம்பித்தனர் .

பொழுதும் புளர ஆரம்பித்தது

அந்த விடியலை விளக்கியபடி சோழர் படை கலியூரை நோக்கி புயலென நகர்ந்தது . முதல் வரிசையில் படைத்தளபதி அப்ரமேயன் சோழ உடையார் நெஞ்சை நிமிர்த்தி படை நடத்த அதே முதல் வரிசையில் தன் வயதையொத்த இளைஞர்கள் படையோடு வெறிகொண்டு தலைமை தாங்கி களம் காண வந்து கொண்டிருந்தார் சோழ வேங்கையின் மைந்தர் ராஜேந்திர சோழ உடையார் 

போர்க்களத்தில் வேங்கையின் மைந்தர் ராஜேந்திர சோழ உடையார் :- சோழ வீரனிடம்
----------------------------------------------------------------------------------------------------------
இளவரசே எனக்கொரு சந்தேகம் ஒரு தூதுவனுக்காக இத்தனை பெரிய போர் அவசியம் தானா கேட்டார் ஒரு சோழப் படை வீரர் . அதற்கு ராஜேந்திர சோழ உடையார் இப்போது நீ போர்க்களத்திற்கு வந்துவிட்டாய் அல்லவா , உன் குடும்பத்தில் சுப நிகழ்வு என்றால் உன் சார்பாக யார் செல்வார்கள்? என்று கேட்டார் வேங்கையின் மைந்தர் ராஜேந்திர சோழ உடையார். அதற்கு சோழப் படை வீரர் என் தம்பி இருக்கின்றானே அவன் பார்த்து கொள்வான் இல்லை என் மகனாவது செல்வான் என்றார் சோழப் படை வீரர் . நல்லது , அப்படி செல்லும் அவர்களை எவரேனும் அவமதித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார் ராஜேந்திர சோழ உடையார் . அவர்களை கொன்றுவிடுவேன் என்று சொன்னார் அவ்வீரர் . ஏன் அவமதித்தது அவர்களை தானே உன்னை அல்லவே எனக் கேட்டார் வேங்கையின் மைந்தர் ராஜேந்திர சோழ உடையார் .என் சார்பாக சென்ற என் குடும்பத்தினரை அவமதிப்பதும் என்னை அவமதிப்பதும் ஒன்று தானே எப்படி விட்டுவிட முடியும் என்று சொன்னார் அவ்வீரர். அதே தான் சோழ நாட்டின் சார்பாக நல்லுறவை நாடிச் சென்ற தூதுவனை அவமதித்து சிறை பிடித்து வைத்திருக்கிறான் சேர மன்னன் , அவனுக்கு உதவுகிறான் கங்க மன்னன் . இவர்களை அழித்து சோழ நாட்டின் தூதுவரை மீட்பது நம் கடமையல்லவா என்று சொன்னார் வேங்கையின் மைந்தர் ராஜேந்திர சோழ உடையார் . அது வேறு இது வேறு அல்லவா இளவரசே என் குடும்பம் என் ரத்த சொந்தம் என் அவ்வீரன் கூறி முடிக்கும் முன் சோழ நாடும் ஓர் குடும்பம் தான் , ஒரே உணர்வு தான் , இங்கு படையில் எனக்கு இருக்கும் பங்கு தான் உனக்கும் . நாட்டிற்காக உயிரை விட துணிந்து களத்திற்கு வந்திருக்கும் நீயும் நானும் ஒன்று தான். ஒருவேளை இப்போரில் நாம் இருவரும் வீர மரணம் எய்தினாலும் நமது மாமன்னர் ராஜ ராஜ சோழ உடையாரின் பார்வை முதலில் உன்னைத் தான் தேடும் உன் குடும்பத்தின் நலன்களை தான் சிந்திக்கும் .உன் பெருமையை தான் பறை அறிவிக்கும். அதன் பின்னர் தான் அவரது மகனான என்னை பற்றியே சிந்திப்பார் எம் மன்னர் என்றார் வேங்கையின் மைந்தர் ராஜேந்திர சோழ உடையார் .இதைக் கேட்டு அந்த சோழ வீரர் உணர்ச்சி பெருக்கால் உயர்த்திய . வாளோடு சோழம் சோழம் சோழம் என்று பெருங்குரலிட்டார் . எதிரிகளும் எதிர்பார்த்து காத்திருந்த அந்த சோழ வேங்கையின் பெயர் என்ன தெரியுமா ? பேரரசர் அருள் மொழி வர்ம உடையார் . அந்த சோழ வேங்கையின் மைந்தன் தான் பேரரசர் ராஜேந்திர சோழ உடையார் .நல்ல விடியல் வேளையில் கங்க மன்னனின் பெரும்படை நம் சோழர் படையின் கண்களில் பட்டது 

போர்க்களத்தில் வேங்கையின் மைந்தர் ராஜேந்திர சோழ உடையார் படைத்தளபதி அப்ரமேயன் சோழ உடையாரிடம்:-
----------------------------------------------------------------------------------------------------------
என்ன நினைக்கிறீர்கள் தளபதியாரே என எதிரி படைகளை தன் பார்வையால் ஊடுருவியபடியே கேட்டார் ராஜேந்திர சோழ உடையார் . நேர் வரிசை படை இருபது உள்ளது. கங்கர் படை தவிர மற்ற அனைத்தும் தனித்தனி தளபதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.அனைவரது பிரிவுகளிலும் யானை , புரவிகள் , வீரர்கள் உண்டு. நேரடி தாக்குதலாகவே இருக்கும். விண்ணி செலுத்தப்பட்ட அம்பு மழையாய் நம் மேல் நேரடி தாக்குதல் நடத்துவார்கள் நான் எண்ணுகிறேன். அளவுகடந்த நம்பிக்கை தெரிகிறது அவர்களது கண்களில் காரணம் அவர்களது பெரும்படை வலிமையாக இருக்கலாம் . நம்மை தடுப்பது மட்டுமே அவர்களது நோக்கமாக தெரியவில்லை . அதை தவிர்த்து வேறு ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது என்றார் தளபதி அப்ரமேயன் சோழ உடையார். நல்லது கவனிப்பு அருமை என்ன செய்யலாம் என எண்ணம் என கேட்டார் ராஜேந்திர சோழ உடையார் . இந்நேரம் தாங்கள் அதை முடிவு செய்திருப்பீர்கள் என நினைக்கின்றேன் என்றார் அப்ரமேயன் சோழ உடையார் . ஒரு சிறு துளை வழியாக ஆதவனின் கதிர்கள் நுழைந்து வெளிவரும் போது சிதறுவதை கண்டதுண்டா எனக் கேட்டார் ராஜேந்திர சோழ உடையார் . உண்டு , ஒரு புள்ளியில் ஆரம்பித்து கோணங்களிலும் சிதறும் . அரை வட்டம் போல தோன்றும் ஆனால் எதிரில் நேர்க்கோடாகவே தோன்றும் என்றார் அப்ரமேயன் சோழ உடையார் .அருமை எதிரிகளின் படைகளை நமது படை அதே வடிவில் தான் எதிர்கொள்ள போகிறது.நாம் சிதறி ஓடுவது போல் எதிரிகளுக்கு தோற்றம் தர வேண்டும் . ஆனால் அவர்களது முழு படையிலும் பரவ வேண்டும் . நேர்க்கோடாக ஐந்து வரிசை யானைப்படைகளை அனுப்புங்கள் . வேறு வேறு கோணங்களாக பிரியும் இடத்தில் புரவி படைகளையும் , வீரர்களையும் அனுப்புங்கள் , எதிரே வருபவர்கள் நம்மை பார்த்து குழப்பம் அடைய வேண்டும் . தாக்க வருகிறார்களா இல்லை தப்பிக்க வருகிறார்களா என்ற குழப்பம் வர வேண்டும் . அது போதும் புயலென உட்புகுந்து புலிகளின் தாக்குதல் என்னவென்பதை உணர்த்தி விடலாம் என்றார் ராஜேந்திர சோழ உடையார் .அப்படியே ஆகட்டும் இளவரசே தாங்கள் தலைமை ஏற்பது யானைப்படைக்கா ? அல்லது புரவி படைக்கா ? என கேட்டார் அப்ரமேயன் சோழ உடையார் . கங்க மன்னனையோ அல்லது வேறு எவரையோ இப்போரில் கைது செய்து வரச்சொல்லியோ அல்லது பிடித்து வரும்படியோ மாமன்னரின் உத்தரவு ஏதாவது உண்டா என கேட்டார் ராஜேந்திர சோழ உடையார் . அப்ப்டி ஏதும் இல்லை இளவரசே என பதில் அளித்தார் அப்ரமேயன் சோழ உடையார் . அருமை அப்படியென்றால் எவரையுமே உயிருடன் விட வேண்டிய அவசியமில்லை என சொல்லுங்கள் . நீங்கள் யானை மீது ஏறி நேர்க்கோடாக செல்லுங்கள் . நான் புரவி படையோடு நுழைகிறேன் . உட்புகுந்து விளையாட உற்சாகம் சற்று அதிகமாகும் அல்லவா என சிரித்தபடியே கேட்ட ராஜேந்திர சோழ உடையாரை வியப்பாகவே நோக்கினார் அப்ரமேயன் சோழ உடையார். எதிரிகளின் கூட்டத்திற்குள் நுழைவதை உற்சாகமாக கருதும் இவர் உண்மையிலேயே மிகச் சிறந்த மாவீரன் தான் மாமன்னர் ராஜ ராஜ சோழ உடையாரின் புதல்வன் என்பதற்கு முழு தகுதியும் இவருக்கு உண்டு என மனதிற்குள்ளேயே பாராட்டினார் அப்ரமேயன் சோழ உடையார் . போர் ஆரம்பித்தது , கங்கர்களின் 18 தளபதிகளின் படையும் நம் சோழர் படைகளை நோக்கி விரைய வேங்கைகளோ தம் இடத்தில் இருந்து எதிரிகளை நோக்கி எல்லா கோணங்களிலும் சிதற என்ன விதமான தாக்குதல் என்று கங்கர்கள் யூகித்து முடிக்கும் முன் கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் சோழ வேங்கைகள் உட்புகுந்தன . நேராக பயணித்த யானைப்படைகள் எதிரிகளை நேராகவே தாக்க , உட்புகுந்த வேங்கைகளோ எதிரி படைகளை சிதறடிக்க அப்ரமேயன் சோழரோ அபாரம் காட்டி கங்கை மன்னனை நேருக்கு நேர் எதிர் கொண்டார் . அவரது வாள் வீச்சில் உருண்ட தலைகள் யானைகளின் கால் பட்டு கூலாகி போக , கங்க மன்னனை நோக்கி வேகமாக முன்னேறினார் . பொன்னிற ஒளிச் சிதறலாய் புறப்பட்ட ராஜேந்திர சோழ உடையாரின் படை பக்கவாட்டிலேயே தாக்குதலை தொடங்க இடைபட்ட எதிரிகள் மட்டுமல்லாது அவர்களது யானைகளும் புரவிகளும் கூட அவசர அவசரமாய் தங்களது ஆயுளை முடித்து கொண்டன. அந்த மாபெரும் போர்க்களத்தில் ராஜேந்திர சோழ உடையார் எங்கிருக்கிறார் என்று தேட வேண்டிய அவசியமே இன்றி போனது .எங்கெல்லாம் எதிரிகளின் தலைகள் உருண்டு பிணக்குவியல்கள் அடுக்கிக் கொண்டே போகிறதோ , எங்கெல்லாம் குருதி ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறதோ , எங்கெல்லாம் பிண வாசனை கண்டு பிணந்தின்னி வல்லூறுகள் வானத்தில் கூட்டம் கூட்டமாய் வட்டமிட்டு கொண்டிருக்கிறதோ , அங்கெல்லாம் ராஜேந்திர சோழ உடையார் நுழைந்து சென்று கொண்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது .கலியூர் என்ற ஒரு ஊரே இல்லாமல் போனது . லட்ச கணக்கான பிணங்கள் , எங்கு நோக்கினாலும் இரத்த சிதறல்கள் , அவயவங்கள் இழந்த யானைகளும் , புரவிகளும் அலறும் சத்தம் அந்த போர்க்களத்தையே களங்கடித்தது . ஒரே பகலில் ஊர் உருக்குலைந்து விடும் என்பதே அன்று தான் பலரும் காண முடிந்தது . எதிரி படைகளுக்கு சேதம் அதிகம் . பாதிக்கு மேல் படைகள் இருந்த தடயம் கூட தெரியவில்லை . அப்ரமேயன் சோழரும் கங்க மன்னனை நேருக்கு நேர் எதிர்த்து கொண்டிருந்தார் .இருவரின் வாள் வீச்சுமே மற்றவரை பலம் கூட்ட செய்தன . எவருமே எதிர்பார்க்காமல் அது நடந்தது . தோல்வியே காணாத அந்த 18 தளபதிகளும் ஒரே நபரை குறிவைத்து நகர்ந்து சுற்றி வளைத்தனர் . உயிரோடோ அல்லது பிணமாகவோ இவனை பிடித்தே ஆக வேண்டும் என்ற வெறியோடு சூழ்ந்தனர் .வட்டமாய் வளையமாய் நம் ராஜேந்திர சோழ உடையாரை நெருங்கினர் .18 தளபதிகளும் ஒன்று சேர்ந்து வளைக்க நினைத்தது சோழ வேங்கையின் மைந்தரான ராஜேந்திர சோழ உடையாரை தான் . செந்தனலில் கிடந்த இரும்பு வளையம் ஒன்று அதிவேகமாய் சுழலும் . அப்போது அதன் மீது மோதும் அனைத்தும் தூக்கி வீசப்படுவதையும் , சிதறி வீழ்வதையும் மட்டுமே காண முடியுமே தவிர சுழலும் வளையத்தை காண்பதென்பது இயலாத காரியம் என்பதை அன்று தான் உணர்ந்தனர் கங்க மன்னனின் 18 தளபதிகளும் . 

ராஜேந்திர சோழ உடையாரின் வாளின் சுழற்சியால் தங்களின் வாள்கள் தெரித்து எகிறுவதை மட்டுமே உணர முடிந்ததே தவிர எங்கிருந்து எப்பக்கமாய் தாக்கினார் என்பதை கூட அவர்களால் உணர முடியவில்லை. எழுந்த புழுதியால் புரவிகள் மிரண்டு முன்னிரெண்டு கால்களை தூக்கியவாறு கனைக்க சுழலும் வாள் பட்டு அவைகளின் கால்கள் காணாமல் போனதை கூட உணராமல் முன்புறமாய் குப்புற விழுந்தன . விழுந்த புரவியில் இருந்து தடுமாறி சுதாறிக்கும் முன் எதிரில் எதுவுமே தெரியவில்லையே என் எதிரிகளின் கண்கள் தேட அவர்கள் கண் முன்னே அவர்களது உடல் தலையின்றி கீழே விழுவதை கண்டது தான் அவர்கள் கண்ட கடைசி காட்சி . தம்மோடு வந்த தளபதிகளின் தலையறுத்து நின்ற ராஜேந்திர சோழ உடையாரை நோக்கி வெறிகொண்டு ஒரு தளபதி வாள் ஓங்கி செல்ல எங்கிருந்தோ வந்த இன்னொரு தளபதியின் தலை மட்டும் ராஜேந்திர சோழ உடையாரின் வாள் முனையில் குத்தி கொண்டு நிற்க அலற திறந்த வாய் மூடும்முன் அவனது தலையும் மண்ணில் புரண்டு கொண்டு இருந்தது . தன்னை சூழ்ந்து வந்த 18 தளபதிகளின் சிரம் அறுத்து ராஜேந்திர சோழ உடையார் ஓய்ந்த பின்பு தான் தெரிந்தது அவர்கள் ஏறி வந்த புரவிகள் கூட அவயவங்கள் இன்றி விழுந்து கிடப்பது திருமாலில் கையில் உள்ள சுதர்சன சக்கரமும் , ராஜேந்திர சோழ உடையாரின் கையில் இருக்கும் வாளும் வேறல்ல என்பது அன்று தான் பல பேருக்கு புரிந்திருக்குமோ என்னவோ. எதிரி படை தளபதிகளின் குருதியில் குளித்து ஆவேசமாய் வெளிவந்த ராஜேந்திர சோழ உடையாரை கண்டவுடன் கங்க மன்னனின் படை வீரர்கள் பின்வாங்க ஆரம்பித்தனர் .வெற்றி முகம் தங்களுக்கு தான் என்பதை அறிந்த பின்பு நம் சோழ வீரர்கள் இன்னும் வெறிகொண்டு தாக்கினர் . பிணந்தின்னிக் கழுகளும் கூட நம் சோழ வீரர்களின் வெறி கண்டு கீழிறங்க பயந்தன . இவர்களின் அதி தீவிர தாக்குதலால் எதிரி படையில் எவருமே தப்புவதற்கு வழியின்றி போனது. தன் பங்கிற்கு அப்ரமேயன் சோழ உடையாரும் கங்க மன்னனுக்கு காலனாகிப் போனார் . அவர் குவித்த பிணங்கள் சிறு சிறு மேடுகளாய் குவியத் தொடங்கின .தழைக்காடு தரைமட்டமாக்கப்பட்டது . கங்கர்களின் அடையாளங்கள் எரியூட்டப்பட்டு , தடம் தெரியாமல் அழிக்கப்பட்டு ராஜ ராஜ நகரம் என்னும் புது நகரம் உருவாக்கப்பட்டது. இந்த மாபெரும் போரின் இத்தனை விவரங்களும் தளபதி அப்ரமேயன் சோழ உடையாரால் வடிவமைக்கப்பட்ட கல்வெட்டில் போர் சிற்பங்களோடு வடிக்கப்பட்டுள்ளது .சரி இக் கல்வெட்டின் முக்கியத்துவம் தான் என்ன ? வெறும் போர் பற்றிய நிகழ்வு தானா என்று கேட்டால் நிச்சயம் இல்லை .இதை கண்டறிந்த பின்பு தான் ஒரு மிகப்பெரிய குழப்பத்திற்கு தீர்வு கிடைத்தது . அது என்ன அத்தனை பெரிய குழப்பம் என்றால் விக்ரம சோழனுலாவில் உள்ள வார்த்தைகளை உங்கள் பார்வைக்கு முன் நிறுத்துகிறோம் .

‘தூதர் காப்புண்டு பகல் ஒன்றில் ஈரொன்பது சிரமும் கொண்டு மலைநாடு கொண்டோனும்

என ராஜேந்திர சோழ உடையாரை பெருமைபடுத்துகின்றன இவ்வரிகள் . தன் தூதன் ஒருவனை சிறை பிடித்ததால் ஒரே பகலில் 18 காடுகளை தாண்டிச் சென்று அழித்து தூதுவனை மீட்டு வந்தார் ராஜேந்திர சோழ உடையார் என்று அதுவரை அவ்வரிகளுக்கு அனைவரும் பொருள் கொண்டிருந்தனர் .இக்கல்வெட்டை கண்டறிந்த பின்பு தான் புரிந்தது அது 18 காடுகள் அல்ல 18 தலைகள் என்று எவரெவர் தலையிழந்தனர் என்பதை 18 தளபதிகளின் பெயர்களோடு காட்சியாய் நிற்கிறது இக்கல்வெட்டு . இன்னும் எத்தனை குழப்பங்களின் விடை கல்வெட்டுகளா புதைந்து கிடக்கின்றனவோ அதெல்லாம் எவர் மூலம் வெளிவறப் போகிறதோ தெரியவில்லை . 
நம் சோழர் குல வரலாற்றை நம் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுங்கள் நண்பர்களே . நிச்சயம் நம் இன வரலாறு மீட்கப்படும் 

வாழ்க சோழர் குலமான பார்க்கவ குலம் , வளர்க சோழர் குலம் , வெல்க வளர்க சோழர் குலம்


Wednesday, 7 June 2017






யாளி

நம்மில் எத்தனை பேருக்கு யாளி என்றால் என்னவென்று தெரியும் ? யாளிகள் நம் கோவில்களில் காணப்படும் விசித்திரமான மிருகம் அதிக இடங்களில் யாளிகளின் தொன்ம சிற்பங்களை காணலாம் என்பது தான் பலரது எண்ணம் . யாழி ஒரு தொன்மையான விலங்கு , சங்க காலத்திலும் வாழ்ந்திருக்கின்றது .டைனோசர் கால விலங்கு .உலகிலேயே மிக அதிகமான பலம் கொண்ட விலங்கு இது தான் . இதை வியாழம், சரபம் என்றும் அழைக்கிறார்கள் . இது அன்றில் பறவை போலவும், அனிச்சம் செடியினம் போலவும் வாழ்ந்து மறைந்துபோன உயிரினம் ஆகும் யாழிகளின் வகைகள்:- சிம்ம யாளி மகர யாளி கஜ யாளி ஞமலியாளி பெரு யாளி யானை யாளி என யாழிகளின் வகைகள் இருக்கின்றதாம் யாளியில் மிகவும் பலம் வாய்ந்தது _கஜயாளியும்,சிம்மயாளியும்_ தான் இதை கண்டால் அனைத்துவிலங்குகளும் நடுங்கும் டைனோசர் உட்பட. இவைதான் டைனோசர் கால காட்டின் ராஜாக்கள் ஒரு யாளி பத்து காட்டுயானைகளுக்கு சமம்,காட்டு யானை என்றால் இப்போது உள்ளவை அல்ல 10000 BC படத்தில் வருமே அதை விட பெரியது.
🌻 *இப்படி பட்ட யாளியை நம் தமிழர்கள் எப்படி அடக்கினார்கள் என்று தானே கூறுகிறீர்கள் அது தான் நம் தமிழரின் நுணுக்கமான வீரம்.* 🌻 🌹யாளியை அடக்குபவன் மாவீரனாக இருக்கவேண்டும். அவன் சில மூலிகைகளின் பலம் கொண்டு, யாளியை அடக்கும் ஆற்றல் பெற்றவன் *கஜகேசரி* ஆவன்(வீரன் என்பவன் தனி ஆட்களை சமாளிப்பவன், மாவீரன் என்பவன் நூறு வீரர்களை ஒரே போரில் சமாளிக்கும் திறன் கொண்டவன்) _இந்த மூலிகைகள் என்னென்ன என சித்தர்கள் பாடல்களில் தெளிவாக உள்ளது.சில மூலிகைகளை உண்டால் யாளியின் பலம் கிடைக்கும் என கொடுத்து இருப்பார்கள். அதை வைத்து யாளியை அடக்கி அதற்க்கு கடிவாளம் போடுவார்கள் பின் அதை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பார்கள்._ 🌻ஆனால் பின் வந்தவர்கள் விளக்கவுரையில் ஒரு யாளின் பலத்தோடு பெண்ணை புணரலாம் என தவறாக கொடுத்துள்ளனர். *நான் தெரியாமல் தான் கேட்கிறேன், ஒரு யாளி பத்து யானைக்கு சமம் என்றால், பத்து யானை பலம் ஒரு பெண்மேல் விழுந்தால் என்ன ஆவது. சற்று கூட யோசிக்காமல் எப்படி இப்படி விளக்கம் எழுதுகிறார்கள் என தெரியவில்லை.* 🌻புணர்தல் என்பதற்க்கு சந்தித்தல் என ஒரு விளக்கம் தொல்காப்பியம் கூறுகிறது ----தொல்காப்பியம் (எழுத்ததிகாரம் 108) 🌻யாளியை அடக்கிய மாவீரன் மதிப்பு மிகுந்தவனாக இருந்திருக்கிறான்,அதுவும் கஜயாளி அடக்கியவனை மிகபெரிய தலைவனாக மதிக்கபட்டுள்ளான். _அந்த மாவீரன் பட்ட பெயராக கஜகேசரி என அழைக்கபடுவான் ._ எல்லாம் மூலிகை மூலம்தான் என்றாலும் அதற்கும் தைரியம் வேண்டும் அல்லவா. 🌻 கோவில்களில் முகப்புகளில் இந்த யாளியின் உருவம் இருக்க காரணம் இதை கண்டால் _தைரியமான விழிப்புணர்வு கிடைக்கும்_ என்கிறார்கள்.இந்த யாளியின் எழும்புகளில் இருந்து உருவாக்கபட்டதே யாழ் இசை கருவி என்றும் *குறிப்பிட்ட யாழ் மிகவும் அதிகபடியான ஒலியலைகளை கொண்டதாக இருந்தது எனவும் உயிரை கொன்றது எனவும் கூறுகிறார்கள்.* காலத்தால் இவை அழிந்து மரவகைகளை பயன்படுத்தி யாழ் செய்யபட்டதாக கூறுகிறார்கள். 🔥யானை, சிங்கம் அமைப்புள்ளதை *கஜயாளி* என்றும்,சிங்கம் போல் உள்ளதை *சிம்மயாளி* என்றும் ஆடுகளைபோல் கொம்பும் சிறிய வால் உள்ளதை *மகரயாளி* என்றும்,நாய்போல் நாக்கு மிக நீளமானதை *ஞமலியாளி* என்றும் பெருச்சாளியை போல் உள்ள சிங்கமுக உயரம் குறைவாக உள்ளதை *பெருயாளி* என்றும் கூறுவர் யாளி குறித்த மருத்துவ பாடல்கள் கீழே நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில் “யாளி” யென விஞ்சுவார் போகத்தில்(போர்களத்தில்) _-அகத்தியர்_ நிரச்சொன்னர் மெய்யாம் தகரையை ஒத்த யாளி(ஆழி),அன்னர்(அன்னம்),புலத்து கையான் தகரை ஒத்துகால் _----தேரையர் _ 🌻யாளி கற்பனை விலங்கு அல்ல அதற்க்கு நம் குமரிக்கண்டம் அகழ்வாரச்சி செய்தால் தான் தெரியும் என்பதால் வெளிநாட்டவர் டைனோசர்தான் பலம் வாய்ந்த விலங்கு என்கிறார்கள், ஆனால் _அங்கோர்வாட் கோவிலில் டைனோசரை காட்டிலும் யாளியின் சிற்பம் அதிகம் உள்ளது என இங்கு சுட்டுகிறேன். டைனோசர் உருவம் சில தான் உள்ளன_ 🙏அதில் சில படங்களும், யாளி வகை படங்களும் கீழே தந்துள்ளேன். 🌻டைனோசர்களை பார்த்து வியக்கும் ஆங்கிலேயர்கள் அதற்க்கு மேலான *யாளியையே கட்டி ஆண்டுள்ளான் என்பது, தமிழனின் வீரத்தை பறை சாற்றும் விதமாக உள்ளது.* கோவில்களில் இதற்கு யாளி சிற்பத்தின் மீது தமிழன் இருப்பது சான்றாக உள்ளது. 🙏ஆய்வுக்கு உதவிய நூல்கள். _1.அகத்தியர் வைத்தியகாவியம்1000_ _2.தேரையர் வைத்திய சாரம்_ _3.அகத்தியர் பரிபூரணம் 1200_ _4.பழங்கால கோவில்கள்(குறிப்புகள்)_ _5.பெரியகோவில் ஆய்வுகள்(குறிப்புகள்)_ _6.போகர் 7000_