Wednesday, 3 May 2017

       அரசநாட்டுச் சோழ உடையார்கள்

மூன்றாம் கரிகாலசோழ உடையார்  களப்பிரர்களையும், முத்தரையர்களையும்  விரட்டியதோடு பல்லவ மன்னனான திரிலோசன பல்லவனை வெற்றி கொண்டு தொண்டை நாட்டை கைப்பற்றினார். ஆனால், அதன்படி மூன்றாம் கரிகால கரிகாலசோழ உடையாரின் புதல்வராகிய நந்திவர்மச் சோழன் வேங்கடமலைக்கு வடக்கே கடப்பை, சந்திரகிரி, அனந்தபுரம், கோலார் பகுதிகளையும், வேங்கடத்திற்கு தெற்கே காளத்தி, நெல்லூர், திருப்பதி, சிற்றூர், புங்கனூர் பகுதிகளையும் ஆளத் தொடங்கினார். இவர்கள் அரசநாட்டுச் சோழர்கள் (ரேனாட்டுச் சோழர்கள்) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் கரிகால சோழ உடையார் வழிவந்தவர்கள். அப்பகுதிகளில் காடுகளை அழித்து நெல்லூர், சிற்றூர், புங்கனூர், திருப்பதி போன்ற புதிய ஊர்களை உருவாக்கினர்.
கி.பி. 550 இல் கருநாடகத்தை ஆண்ட கங்க அரசர்களில் ஒருவனான துர்விந்தன் என்ற சிறந்த மன்னனின் மனைவியார் ஒரு சோழ உடையார்  இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழ உடையாரின் வழிவந்தவனும் பரம சத்திரியனுமான சோழ உடையார் அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழ உடையார் குலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
·         நந்திவரும சோழ உடையார் 550 – 575
·         தனஞ்செய சோழ உடையார் 575 – 609
·         மகேந்திரவருமச் சோழ உடையார் 609 – 630
·         புண்ணியகுமார சோழ உடையார் 630 – 655
·         விக்கிரமாதித்த சோழ உடையார் 650 – 680
·         சக்திகுமார சோழ உடையார் 680 – 705
·         விக்கிரமாதித்த சோழ உடையார் II 705 – 730
·         சத்தியாதித்தச் சோழ உடையார் 730 – 755
·         விஜயாதித்த சோழ உடையார் 755 – 790
·         ஸ்ரீகாந்த ஸ்ரீமனோகர சோழ உடையார் 790 – 848
புண்ணியகுமார சோழனி உடையாரின் ஆட்சிக் காலத்தில் வருகை தந்த'யுவான் சுவாங்' என்ற சீனப் பயணி இவர்கள் நாட்டை' சூளியே' என்றும் அவர்கள்  சோழன் கரிகாலன் பரம்பரையினரைச் சேர்ந்ததாகக்  குறிப்பிடுகிறார். இச்சோழப் பேரரசர்களின் சோழநாட்டு எல்லை, தான்ய கடகத்திற்கு தென்மேற்கே 200 கல் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அது 480 கல் சுற்றளவு கொண்டதாகவும் தலைநகரம் 2 கல் சுற்றளவு கொண்டதாகவும் அச்சீனப்பயணி தன் பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
சிற்றரசர்களான சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். பல குறுநில மன்னர்களோடு திருமணத் தொடர்பு கொண்டு இழந்த செல்வாக்கை சோழர்கள் மீட்க முயன்றனர். விசயாலய சோழ உடையார்  பாண்டிய மேலாதிக்கத்திலிருந்து ஆட்சி செய்த முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தான். ஸ்ரீகாந்த ஸ்ரீமனோகர சோழ உடையாரின் வழித்தோன்றல் விசயாலய சோழ உடையார் என சுந்தர சோழ உடையார் வெளியிட்ட அன்பில் பட்டயம் தெரிவிக்கின்றது
  பழையாறை சோழ உடையார்கள்
·         இசை வெங்கிள்ளி சோழ உடையார் 300 – 330
·         கைவண்கிள்ளி சோழ உடையார் 330 – 350
·         பொலம்பூண்கிள்ளி சோழ உடையார் 350 – 375
·         கடுமான்கிள்ளி சோழ உடையார் 375 – 400
·         கோச்சோழன் செங்கணான் உடையார் II 400 – 440
·         நல்லடி சோழன் 440 – 475
·         பெயர் தெரியவில்லை 476 – 499
·         கோச்சோழன் செங்கணான் சோழ உடையார் III 499 – 524
·         புகழ் சோழ உடையார் 524 – 530
·         கரிகால சோழ உடையார் III 530 – 550

No comments:

Post a Comment