Wednesday, 3 May 2017











பேரரசர் ராஜேந்திர சோழ உடையார்



பாகுபலி ஒரு கற்பனைக் கதை..
ஆனால் அந்த கற்பனையையே மிஞ்சிவிடும் சாகசங்களை செய்த ஒருவர் நிசமாகவே இருந்தார்.
ஆயிரம் வருடங்களுக்கு முன் ரத்தமும் சதையுமாக நடமாடினார்..
போர் அவரது வாழ்க்கை முறை.
வாள் அவரது முதல் மனைவி,
வில் அவருக்கு இரண்டாவது மனைவி.
தன் வாழ்நாளின் இருபது வருடங்களை கடற்போரிலேயே கழித்தவர்.
எதிர்த்து நின்றவர்களை தூசி கூட மிச்சம் இல்லாமல் தூர்வாரித் தள்ளியவர்.
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும் விரல் நுனியில் வைத்திருந்தவர்
தற்பெருமை இல்லா பேரரசர் ராஜேந்திர சோழ உடையார்
அறுபதாயிரம் யானைகள் கொண்ட யானைப் படைகளையும்,ஒரு லட்சம் காலட்படை வீரர்களையும் கொண்ட ஒரு யுத்த சேனையை வங்கக் கடலை கிழித்து கடந்து கொண்டு போய் மறு கரையிலே நிறுத்திய அடுத்த நொடி,மறு பேச்சில்லாமல் வீழ்ந்த நாடுகள் ஏராளம்.
தன் வாழ்நாளில் எண்ணற்ற போர்களில் கலந்து கொண்டு அதில் பெரும் வெற்றியடைந்து தமிழர்களின் வீரத்தை மீண்டும் உலகறியச் செய்தார் பேரரசர் ராஜேந்திர சோழ உடையார்
மலேசியா,தாய்லாந்து,சிங்கப்பூர்,இந்தோனேசியா,ஜாவா,சுமத்திரா,இலங்கை என கீழ்த்திசை நாடுகள் முழுவதும் வென்று அங்கே நம் சோழர் குல புலிக்கொடியைப் பறக்க விட்டவர் பேரரசர் ராஜேந்திர சோழ உடையார்
கடலென திரண்டிருந்த காலட்படையையும் வில்லின் வேகத்தை மிஞ்சும் குதிரைப்படையையும்,நீந்தும் திமிங்கலங்களை போன்ற யானைப்படையையும் ஒருசேர வழிநடத்தியவர் பேரரசர் ராஜேந்திர சோழ உடையார்
எண்ணற்ற நாடுகளை கைப்பற்றினார்
தன் வாழ்நாளில் தோல்வியே கண்டிராதவர் ராஜேந்திர சோழ உடையார்
தோல்வி என்பது ராஜேந்திர சோழ உடையாரின் அகராதியிலேயே கிடையாது
தன் வாழ்நாளில் வெற்றியை மட்டுமே கண்டவர் ராஜேந்திர சோழ உடையார்
ஈடு இணையற்ற பேரரசர்..
தமிழ்ப் பேரரசர்..
"ராஜேந்திர சோழ உடையார்"
வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த சரித்திர நாயகன் ராஜேந்திர சோழ உடையார்.
கங்கை நீரை கொண்டு வந்து கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த புலிக்கொடி வேந்தர் ராஜேந்திர சோழ உடையார்
.
நம் சோழர் குல வரலாற்றை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.
இந்த கோடை விடுமுறையில் முடிந்தவர்கள் ராஜேந்திரசோழ உடையாரின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். நம் சோழர் குலத்தின் சாகசங்களைச் சொல்லுங்கள்.


No comments:

Post a Comment