Thursday, 18 May 2017



                                             

          பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியார்


                                                      

மன்னர்களுக்கெல்லாம் மன்னர் மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழ உடையார் புகழ் வாழ்க !!!
சோழர் குல வரலாற்றில் கண்டாரதித்த சோழ உடையாரின் மனைவியாகவும், உத்தம சோழ உடையாரின் தாயகவும், மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழ உடையாரின் பெரிய பாட்டியாகவும் தான் வாழ்ந்த 90 ஆண்டுகளில்
முதலாம் பராந்தகச் சோழ உடையார் (கி.பி.907–953)
கண்டராதித்த சோழ உடையார் 950–957
அரிஞ்சய சோழ உடையார் 956–957
ஆதித்த கரிகால சோழ உடையார்கி.பி. 957-969
சுந்தர சோழ உடையார் (இரண்டாம் பராந்தகச் சோழ உடையார்) (கி.பி.956–973)
(மதுராந்தக சோழ உடையார்) உத்தம சோழ உடையார் (கி.பி.970–985) 
ராசராச சோழ உடையார் கி.பி.985–1014)
இராசேந்திர சோழ உடையார் கி.பி. 1012-1044
முதலிய எட்டு சோழப்பேரரசர்களின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியார்
எட்டு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்
இவரை போல் வாழ்ந்த பேரரசி ஒருவரை உலகில் காண இயலாது.
முதலிய ஆறு சோழப்பேரரசர்களின் பேரரசை வழி நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் அமைத்து திருப்பணிகள் புரிந்தும், தமிழக கட்டடகலை வரலாற்றில் சிறந்து விளங்கியவரும் மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழ உடையாரை வளர்த்து ஆளாக்கியவர் செம்பியன் மாதேவி.
ராசராச சோழ உடையாரை பேரரசராகவும், கோவில் கட்டுமானம் செய்யும் படைப்பாளியாகவும், மக்களை நேசித்த பேரரசராகவும், ஆட்சியில் பல்வேறு சிறப்புகளை பெறுவதற்கு இவரின் வளர்ப்பு நிலையும், ராசராச சோழ உடையாரின் தமக்கை குந்தவை நாச்சியாரின் வளர்ப்பும் வழிகாட்டுதலும் காரணமாக விளங்கின.
பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியாரை போற்றும் விதமாக அரியலூர் மாவட்டம், செம்பியக்குடியில் ஐம்பொன்னால் 6 3/4 அடி உயரத்திலும் 1000 கிலோ எடையுடன் கூடிய பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியாரின் முழு உருவ சிலை 13.05.17 அன்று மாண்புமிகு அய்யா உயர் திரு டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பொற்கரங்களால் வைக்கப்பட்டது.
சோழ வம்சமே பார்க்கவகுல சமுதாயம்

No comments:

Post a Comment