Saturday, 6 May 2017

                மைசூர் உடையார் மன்னர்களில் சிலர்



                        சிறு குறிப்பு




மைசூர் அரசு  தென்னிந்தியாவில்  மைசூர் பகுதி உடையார் அரச குலத்தின் பகுதிகளில் ஒன்றாகும்
இவர்கள் கன்னட சோழ வம்சத்தை சார்ந்தவர்கள்

தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. நரசராச உடையார் மற்றும் சிக்க தேவராச உடையார் ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான தன்னாட்சி அரசு ஆண்டுகொண்டு இருக்கின்றது

யதுராய உடையார்1399-1423
முதலாம் சாமராச உடையார்1423-1459
முதலாம் திம்மராச உடையார்1459-1478
இரண்டாம் சாமராச உடையார்1478-1513
மூன்றாம் சாமராச உடையார்1513-1553

இரண்டாம் திம்மராச உடையார்1553-1572
நான்காம் சாமராச உடையார்1572-1576
ஐந்தாம் சாமராச உடையார்1576-1578
முதலாம் இராச உடையார்1578-1617
ஆறாம் சாமராச உடையார்1617-1637
இரண்டாம் இராச உடையார்1637-1638
முதலாம் நரசராச உடையார்1638-1659
தொட்ட தேவராச உடையார்1659-1673
சிக்க தேவராச உடையார்1673-1704
இரண்டாம் நரசராச உடையார்1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார்1714-1732
ஏழாம் சாமராச உடையார்1732-1734

இரண்டாம் கிருட்டிணராச உடையார்1734-1766
நஞ்சராச உடையார்1766-1772
எட்டாம் சாமராச உடையார்1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார்1776-1796

மூன்றாம் கிருட்டிணராச உடையார்1796-1868
பத்தாம் சாமராச உடையார்1881-1894
நான்காம் கிருட்டிணராச உடையார்1894-1940
செயசாமராச உடையார்1940-1950
கௌரவ அரச உடையார்கள்
செயசாமராச உடையார்1950-1974
சிறீகண்ட உடையார்1974-2013
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார்2015-







யதுராய உடையார்

ஆதி யதுராய உடையார் அல்லது ராஜா விஜய ராஜ் உடையார் (1371- 1423), மைசூரின்  மன்னராக 1399 முதல் 1423 வரை இருந்தவர்

முதலாம் சாமராச உடையார்

முதலாம் சாமராஜ உடையார் (1408 - 1459) மைசூரின் மன்னராக 1423 முதல் 1459 வரை இருந்தவர். இவர் மைசூர் மன்னர் யதுராய உடையாரின் மூத்தமகனாவார். தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு பட்டத்திற்கு வந்தார். இவர் 1459 இல் இறந்தார்.

முதலாம் திம்மராச உடையார்

இராஜா அப்பண்ண திம்மராஜ உடையார் அல்லது முதலாம் திம்மராஜ உடையார் (1433 - 1478) மைசூரின் மன்னராக 1459 முதல் 1478 வரை இருந்தவர். இவர் மைசூர் மன்னராக இருந்த முதலாம் சாமராஜ உடையாரின் மகனாவார். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கு வந்தார். இவர் 1478 இல் இறந்தார்.


இரண்டாம் சாமராச உடையார்

இரண்டாம் சாமராச உடையார் (1463 - 1513) என்பவர் மைசூரின் மன்னராக 1478 முதல் 1513வரை இருந்தவர். இவர் மைசூர் மன்னரான முதலாம் திம்மராஜ உடையாரின் மகனாவார். தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு 1478 இல் பட்டத்திற்கு வந்தார். இவர் 1513 இல் இறந்தார்

மூன்றாம் சாமராச உடையார்

மூன்றாம் சாமராச உடையார் (29 செப்டம்பர் 1492 - 17 பிப்ரவரி 1553) இவர் மைசூரின் மன்னராக 1513 முதல் 1553வரை இருந்தவர். இவர் மைசூர் மன்னர் இரண்டம் சாமராச உடையாரின் மகனாவார் இவரின் தந்தையின் மரணத்திற்கு பிறகு 1513 இல் பட்டத்திற்கு வந்தார். இவர் 17 பிப்ரவரி 1553 இல் இறந்தார்.

இரண்டாம் திம்மராச உடையார்

இரண்டாம் திம்மராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1553 முதல் 1572 வரை இருந்தவர். இவர் மைசூர் மன்னர் மூன்றாம் சாமராச உடையாரின் மூத்த மகனாவார். இவரின் தந்தையின் மரணத்திற்கு பின் பெப்ரவரி 1553 இல் பட்டத்திற்கு வந்தார். இவர் 1572 இல் இறந்தார்.

நான்காம் சாமராச உடையார்

நான்காம் சாமராச உடையார் (25 சூலை 1507 - 9 நவம்பர் 1576) என்பவர் மைசூரின் மன்னராக 1572 முதல் 1576 வரை இருந்தவர். இவர் மைசூர் மன்னர் மூன்றாம் சாமராச உடையாரின் இளைய மகனாவார். இவர் தனது அண்ணனின் மரணத்திற்கு பிறகு பெப்ரவரி 1572 இல் பட்டத்திற்கு வந்தார். இவர் 1576 இல் இறந்தார்.

ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578


முதலாம் இராச உடையார்

முதலாம் இராச உடையார் (2 சூன் 1552 - 20 சூன் 1617) என்பவர் மைசூரின் மன்னராக 1578 முதல் 1617 வரை இருந்தவர். இவர் மைசூர் மன்னர் நான்காம் சாமராச உடையாரின் மூத்த மகனாவார்

ஆட்சி விரிவாக்கம்

இராச உடையார் துவக்கத்தில் 33 சிற்றூர்களுக்கும் 300 வீரர்களுக்கும் தலைவனாக இருந்தார். விசயநகர குறுநில மன்னரான இவர், பேரரசின் வலிவு குன்றியதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, படிப்படியாக புதிய பகுதிகளை வென்று தன் அரசை விரிவுபடுத்தினார். 1612 இல் மண்டலத் தலைநகரான சீரங்கப்பட்டணத்தை கைப்பற்றினார். இவ்வெற்றியினால் மைசூர் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது. சீரங்கப்பட்டணம் உடையார்களின் அரசியல் மையமானது. சீரங்கப்பட்டண வெற்றியைத் தொடர்ந்து, இராச உடையார் தன் நாட்டின் வட பகுதியில் இருந்த செகதேவிராயர்களின் ஆட்சிப் பகுதிகளையும், தென்பகுதியிலிருந்த பாளையக்களையகாரர்களின் தெற்கு, கிழக்கு பகுதிகளையும் வென்று தன் அரசோடு இணைத்துக்கொண்டார்

ஆறாம் சாமராச உடையார்


ஆறாம் சாமராச உடையார் (21 ஏப்ரல் 1603 - 2 மே 1637) என்பவர் மைசூரின் மன்னராக 1617 முதல் 1637 வரை இருந்தவர்.]இவர் முதலாம் இராச உடையாரின் பேரனானாவார். தாத்தாவின் மறைவுக்கு பிறகு ஆறாம் சாமராச உடையார் 3.7.1617 இல் பதவியேற்றார். இவர் சிறுவனாக இருந்தமையால் நிருவாக பொறுப்பை தளவாய் ஏற்றுக்கொண்டான். உரிய வயது அடைந்ததும் 1620 இல் ஆட்சி பொறுப்பேற்றார்.

ஆட்சி விரிவாக்கம்

பேரரசின் வலிவு குன்றியதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு தளவாயும், அரசனும் படிப்படியாக புதிய பகுதிகளை வென்று தான் அரசை விரிவுபடுத்தினா். செகதேவிராயர்களின் தலைநகரான சென்னபட்டணத்தையும் வென்று தன் அரசோடு இணைத்துக்கொண்டானர்

இரண்டாம் இராச உடையார்

இரண்டாம் இராச உடையார் (26 மே 1612 - 8 அக்டோபர் 1638) என்பவர் மைசூரின் மன்னராக 1637 முதல் 1638 வரை இருந்தவர்.இவர் முதலாம் இராச உடையாரின் நான்காவது மகனாவார்

முதலாம் நரசராச உடையார்

முதலாம் நரசராச உடையார் அல்லது கண்டீரவ நரசராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1638 முதல் 1659 வரை இருந்தவர். இவர் விசயநகர பேரரசர்களான இரண்டாம் வேங்கடவன், ஆறாம் சீரங்கன், பீசப்பூரின் முகமது அதில் சா, இக்கேரியின் வீரபத்ர நாயக்கன், சிவப்ப நாயக்கன், மதுரையின் திருமலை நாயக்கன் ஆகியோரின் சம காலத்தவர்

வெற்றிகள்

இவர் தன் ஆட்சி துவக்கத்திலேயே பீசப்பூர் இரனதுல்லா கான் தலைமையிலான படையெடுப்பை எதிர்கொள்ள நேர்ந்தது. அவர்களை விரட்டி அடித்தார். தாணாய்கன் கோட்டை, சத்தியமங்கலம்ஓசூர், முதலிய பகுதிகளை கைப்பற்றினார். 1641இல் கெட்டி முதலியாரின் பகுதிகள், 1652இல் பீசப்பூர் ஆட்சியிலிருந்த மேற்கு பாராமகால், வீரபத்ர துர்க்கம்பென்னாகரம்தர்மபுரிதேன்கனிக்கோட்டை பகுதிகள், கோயமுத்தூர் பகுதி போன்ற பகுதிகளை வென்று மைசூருடன் இணைத்தார்

பணிகள்

வெற்றிகளால் வந்த வருவாயைக் கொண்டு சீரங்கப்பட்டண கோட்டையைப் பலப்படுத்தினார். ஒரு தங்க சாலை அமைத்து தன் பெயரால் கண்டீராயி ஹண என்னும் தங்க நாணயங்களையும், ஆனெகாசு என்ற பெயரில் செப்பு காசுகளையும் வெளியிட்டார்

தொட்ட தேவராச உடையார்

தொட்ட தேவராச உடையார் அல்லது தொட்ட கெம்ப தேவராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1659 முதல் 1673. வரை இருந்தவர். 1673இல் இறந்தார்

வெற்றிகள்

இவர் தன் ஆட்சி துவக்கத்திலேயே சீரங்கப்பட்டணம், இக்கேரியின் முதலாம் சிவப்ப நாயக்கனால் முற்றுகையிடப்பட்டது. கி.பி.1661 முதல் 1664 வரை இக்கேரிக்கும்மைசூருக்கும் பல போர்கள் நடைபெற்றன. 1668 இல் இவர் ஈரோடுதாராபுரம், குணிக்கல் போன்ற பகுதிகளை வென்று மைசூருடன் இணைத்தா

சிக்க தேவராச உடையார்


சிக்க தேவராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1673 முதல் 1704 வரை இருந்தவர்.1704இல் இறந்தார். சிக்க தேவராசன் சிறந்த அரசியல் மேதை. ஆட்சித்திறன் மிக்கவர். முகலாய பேரரசர் ஔரங்கசீப்புடன் நல்ல நட்புறவு ஏற்படுத்திக் கொண்டார்.

ஆட்சி விரிவாக்கம்

அருகிலுள்ள மற்ற நாடுகளை வென்று தனது ஆட்சிப் பரப்பை விரிவாக்கிக் கொண்டார். 1675-78க்கு இடையே தனது ஆட்சிப் பரப்பை பீசப்பூர் வரை நீட்டித்துக் கொண்டார். இருப்பினும் மராத்தியரின் ஆக்கிரமிப்புகளால் இவரது ஆட்சிப் பரவல் தடுக்கப்பட்டது. காசிம் கானிடம் மூன்று இலட்சம் ரூபாய் கொடுத்து பெங்களூரை வாங்கினார்.1704இல் அவர் இறப்பதற்கு முன் பழைய சேலம் மாவட்டம் முழுவதும் மைசூரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகிவிட்டன

இரண்டாம் நரசராச உடையார்

Narasaraja Wadiyar II.jpg
ரண்டாம் கண்டீரவ நரசராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1704 முதல் 1714 வரை இருந்தவர்.1704இல் சிக்க தேவராச உடையார் இறந்தபிறகு, அவரது மகனான கண்டீரவ நரசராச உடையார் ஆட்சிக்கு வந்தார்

முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார்

Krishnaraja I.jpg
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் (18 மார்ச் 1702 - 5 மார்ச் 1732) என்பவர் மைசூரின் மன்னராக 1714 முதல் 1732 வரை இருந்தவர்

வாழ்க்கை

தொட்ட கிருட்டிணராச உடையார் 18 மார்ச் 1702இல் பிறந்தார். இரண்டாம் கண்டீரவ நரசராச உடையாரின் இரண்டாம் மணைவியாகிய செல்வஜா அம்மணி அவருவின் முதல் ஆண்பிளைளையாவார். கண்டீரவ நரசராச உடையார் இறந்ததால் இவரின் பத்தாவது வயதில்  அரியணையில் அமர்ந்தார், . தொட்ட கிருட்டிண ராச உடையார் ஒன்பது பேரை மணந்தார். இவரது முதல் மனைவிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. இவர் 5 மார்ச் 1732இல் தன் 29ஆம் வயதில் இறந்தார்

ஏழாம் சாமராச உடையார்

மகாராசா சிறீ சாமராச உடையார் (1704 - 1734) அல்லதுஏழாம் சாமராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1732 முதல் 1734 வரை இருந்தவர்.மன்னர் தொட்ட கிருட்டிணராசன் இறந்தபோது தேவராசன் என்பவர் தளவாய் ஆகவும் நஞ்சராசன் என்பவர் முதலமைச்சராகவும் இருந்தனர். ஆட்சியில் இவர்கள் ஆதிக்கமே இருந்தது.

இரண்டாம் கிருட்டிணராச உடையார்

மகாராசா சிறீ இம்மிடி சிக்க கிருட்டிணராச உடையார் , - 25 ஏப்ரல் 1766) அல்லது இரண்டாம் இம்மடி கிருட்டிணராச உடையார்என்பவர் மைசூரின் மன்னராக 1734 முதல் 1766 வரை இருந்தவர்

நஞ்சராச உடையார்

மகாராசா சிறீ நஞ்சராச தளவாய் உடையார் பகதூர் (1748 - 2 ஆகத்து 1770) அல்லது நஞ்சராச உடையார், என்பவர் மைசூரின் மன்னராக 1766 முதல் 1770 வரை இருந்தவர்

வாழ்க்கை

இவர் மகாராசா இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் மூத்த மகனாவார். இவர் தந்தையின் மரணத்துக்குப் பிறகு 1766 இல் பட்டத்துக்கு வந்தார்.
2 ஆகத்து 1770, அன்று ஐதர் அலியால் அனுப்பப்பட்ட நஞ்சு கலந்த பாலை அருந்தி இறந்தார்

எட்டாம் சாமராச உடையார்

மகாராசா சிறீ பெட்டத சாமராச உடையார் பகதூர் (27 ஆகத்து 1759 - 6 செப்டம்பர் 1776.) என்பவர் மைசூரின் மன்னராக 1770 முதல் 1776 வரை இருந்தவர்

வாழ்க்கை

இவர் இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் இரண்டாவது மகனாவார்.இவரின் அண்ணன் நஞ்சராச உடையாரின் இறப்பிற்கு பிறகு 2 ஆகத்து1770 அன்று முடிசூட்டப்பட்டார்.
16 செப்டம்பர் 1776, இவர் சிறீரங்கப்பட்டண அரண்மனையில், ஐதர் அலியின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டார்

ஒன்பதாம் சாமராச உடையார்


சிறீமத் ராசாதிராச ராச பரமிசிவர ராச மார்த்தாண்ட பரவ்த பிரதாபபட்டிமவிரா நரப்பட்டி மகிசுர சிம்மமானருடரகிருவா மகாராச சிறீ காச சாமராச உடையார் (28 பெப்ரவரி 1774 – 17 ஏப்ரல் 1796) என்பவர் மைசூரின் மன்னராக 1776 முதல் 1796வரை இருந்தவர். இவர் மூன்றாம் கிருட்டிணராச உடையாரின் தந்தையாவார். இவர் ஒன்பதாம் சாமராச உடையார் என்று அழைக்கப்படுகிறார்

 17 ஏப்ரல் 1798இல் பெரியம்மை நோயாலோ திப்புவால் விஷம் வைத்து கொல்லப்பட்டோ இறந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

மூன்றாம் கிருட்டிணராச உடையார்



சிறீமான் இராசாதிராசா இராச பரமேசுவர பிரௌத-பிரதாப அபராதிம-வைர நரபதி பைருத்-அந்தீம்பர-கண்ட மகாராசா சிறீ கிருட்டிணராச உடையார் III பகதூர் (14 சூலை 1794 – 27 மார்ச் 1868) அல்லது மூன்றாம் கிருட்டிணராச உடையார்  என்பவர் மைசூர் சமத்தானத்தின் மன்னராக இருந்தவர்.இவர் மும்மடி கிருட்டிணராச உடையார்என்றும் அழைக்கப்பட்டார். இவர் உடையார் மரபைச் சேர்ந்த மன்னராவார். இவர் ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் 30 சூன் 1799 முதல் 27 மார்ச் 1868 வரை ஆட்சிபுரிந்தார்.இவர் காலத்தில் பல்வேறு கலைகளையும் இசையையும் ஆதரித்து வளர்த்தார்

பத்தாம் சாமராச உடையார்


Chamaraja Wodeyar 1863-94.jpg
மகாராஜ ஸ்ரீ சேர் பத்தாம் சாமராச உடையார் (பெப்ரவரி 22, 1863 - 28 டிசெம்பர் 1894) அல்லது சாமராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1868 தொடக்கம் 1894 வரை திகழ்ந்தார்.  இவரின் முன் மூன்றாம் கிருட்டிணராச உடையார் ஆட்சியில் இருந்தார், இவரின் பின் நான்காம் கிருட்டிணராச உடையார் ஆட்சிக்கு வந்தார். 22 பெப்ரவரி 1863 அன்று இவர் பிறந்தார். 28 திசம்பர் 1894 திசம்பர் (அதாவது இவர் இறக்கும் வரை) இவர் ஆட்சியில் இருந்தார். இவரின் அம்மா லக்சுமிவிலாச சனித்தான ஸ்ரீ பிரதாப குமரி அம்மணி அவரு மூன்றாம் கிருட்டிணராச உடையாருடைய மகள் ஆவார்


நான்காம் கிருட்டிணராச உடையார்

Maharaja Sir Sri Krishnaraja Wodiyar 1906 by 1906 K Keshavayya.jpg
நான்காம் கிருட்டிணராச உடையார் (4 சூன் 1884 – 3 ஆகத்து 1940, பெங்களூர் அரண்மனைமைசூரின் மன்னராக 1894 ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறினார். தான் இறக்கும் வரை (அதாவது 1940 ஆம் ஆண்டு வரை) இவர் ஆட்சியில் இருந்தார். இவர் ஒரு மெய்யியலாளர் ஆவார். இவர் இறக்கும் போது உலகப் பணக்கார நபர்களுள் ஒருவராக திகழ்ந்தார். அப்போது இவருடைய சொத்து 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 2010 ஆம் ஆண்டில் இதன் மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்



ஜெயச்சாமராஜா உடையார்

Jayachandra-maharaja-wadiyar.jpg
ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் (Jayachamaraja Wodeyar) (சூலை 181919 - செப்டம்பர் 231974மைசூர் சமஸ்தானத்தின்  அரசராக 1940 லிருந்து 1950 வரை இருந்தார். மதராஸ் மாநிலஆளுநராகப் பதவி வகித்தவர். 1964 தொடக்கம் 1966 வரை

இவர் ஒரு மெய்யியலாளர், இசையியலாளர், அரசியல் சிந்தனையாளர் மற்றும் கொடையாளராக அறியப்படுகிறார்

ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார்

ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் (Srikantadatta Narasimharaja Wadiyar) (பெப்ரவரி 20 1953 – டிசம்பர் 10 2013) இவர் மைசூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தெடுக்கப்பட்டார்

அரசர் பரம்பரை

இவர் மைசூர் சமஸ்தானத்தின் அரசரான ஜெயச்சாமராஜா உடையாரின் மகன் ஆவார். இவரது தந்தையை அடுத்து 1974 ஆம் ஆண்டு இவர் மைசூர் மன்னராக பொறுப்பேற்றார். எனினும் அந்தப் பதவி சம்பிரதாய பூர்வமானதாகவே இருந்தது. நவராத்திரி விழாவில் இவரது பங்கு முன்னிலைப் படுத்தப்பட்டது

இறப்பு

டிசம்பர் 10 2013 அன்று பெங்களூரு அரண்மனையில் மாரடைப்பால் காலமானார். டிசம்பர் 11 2013 அன்று அவரது உடல் தங்க அம்பாரியில் நஞ்சன்கூடு கொண்டு செல்லப்பட்டு மனுவனத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

யதுவீர கிருட்டிணதத்த சாமராச உடையார் 2015-





























No comments:

Post a Comment