Saturday, 6 May 2017

சாளுக்ய அரசன் சத்யாசிரயனுடைய பட்டத்து யானையைக் கொன்ற சத்திரியன் சுருதிமான் நக்கன் சந்திரன்


கிபி 1015 ம் வருடம் முதலாம் ராஜேந்திர சோழ உடையாருடைய யானைப்படைத் தளபதியாக திகழ்ந்த மாவீரர் சத்ரிய குல சிங்கம் சுருதிமான் நக்கன் சந்திரன் கடக்கம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் பட்டத்து யானையைக் கொன்று தானும் வீர மரணம் அடைந்தார். இத் தளபதியின் நினைவாக ராஜேந்திர சோழன் ஊட்டத்தூர் கோவிலுக்கு நிவந்தம் அளித்ததாக கல்வெட்டு காணப்படுகிறது.
சுருதிமான்கள் அனைவருமே சிறந்த போர்வீரர்களாக அதிலும் தளபதியாக திகழ்ந்திருக்கின்றனர்.
சுருதிமானின் சில பட்டங்கள் மட்டும்
உடையான்
அரையன்
பேரரையன்
விழுப்பரையன்
வானராயர்
இருங்கோளன்
சுருதிமான்
மறவன் கண்டன்(சுத்த வீரன்)
நிஷாத ராஜன்
படைமுதலி
தெரிந்த வில்லிகள்
சுருதிமான்
வன்னிய நாயன்
நாயன்
ராஜமல்லன்
சுருதிமான் ஊரன் நம்பி(கத்திக்காரன்)
மழவன்
சுருதிமான் நாட்டார்
நாடாள்வான் என்று இது போன்று இன்னும் அநேகம் பட்டங்கள் உள்ளன. இவையெல்லாம் பட்டங்களே இது போருக்கு சென்றவர் யாருக்கும் கிடைக்கலாம்.
ஆனால் இதில் அரசகுலவன் (பார்க்கவ குலம்,யது குலம்)என்று காணப்படுகிறதே இது தான் சத்திரியன் என்ற இனத்தைக் குறிப்பது. போருக்கு எல்லோரும் சென்றிருப்பதாக கூறுவார்கள். ஆனால் அவர் அனைவருக்கும் இம்மாதிரி அரசகுலத்தவர்(சத்திரியன்) என்று கல்வெட்டு காணப்படாது உறுதியாக. இது அரச வம்சத்தவர்க்கு மட்டுமே உரியது.



மேலும் முக்கியமாக பார்க்கவ குலத்தவன் என்றும்  அரசகுலத்தவன் என்றும் உடையான் என்றும் மலையமான் நத்தமான் சுருதிமான் ஆகிய இம் மூவருக்குமே பொது ஒற்றுமை கொண்ட கல்வெட்டுகள் காணப்படுகிறது. ஆகவே தான் நாம் பார்க்கவ குல உடையார்கள் வேற்றுமைக்கு நமக்குள் வழியே இல்லை. வீரத்திற்கும் பாரம்பரியப்பெருமைக்கும் பண்பிற்கும் நமக்கு குறை ஒன்றுமில்லை





No comments:

Post a Comment