Tuesday, 20 June 2017



அந்த காலத்திலேயே நதிகளை இணைத்த நம் பாண்டிய குல மன்னர்






அந்த காலத்திலேயே நதிகளை இணைத்த நம் பாண்டிய குல மன்னர்
உலகத்தில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு நம் குலமான சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கு உண்டு நம் சோழர் குலத்திற்கு அடுத்தாற்போல் புகழ் பெற்று விளங்கியது நமது மற்றொரு குலமான பாண்டியர் குலம் . ஒரு காலத்தில் மிக பிரம்மாண்டமாக இயங்கி கொண்டிருந்த நம் குமரிக் கண்டத்தை மண்ணின் மைந்தர்களான நம் குலமான சோழர்களும்
பாண்டியர்களும் சிறப்பாக ஆண்டனர் . அந்த காலத்திலேயே நதி நீர் இணைப்பு எவ்வாறு நடந்தது எதற்காக நடந்தது அதை எப்படி நடத்தி காட்டினார்கள் என்ற விடயத்தை நாம் பார்ப்போம் . மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் உருவாகிறது பரலை ஆறு அதே மலையின் மற்றொரு பகுதியில் உருவாகிறது பழையாறு . பரலை ஆற்றுடன் ஒப்பிடும் போது பழையாறு மிகவும் சிறியது . அதோடு கோடைக்காலங்களில் நீர் வளம் குறைந்து வறண்டு போனதால் அந்த ஆற்றின் நீரை நம்பியிருந்த நாஞ்சில் நாட்டு மக்கள் கடும் பஞ்சத்திற்கு ஆளாயினர் . அதே சமயம் கொஞ்சம் தூரத்தில் இருந்த பரலை ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் ஓடி கடலில் கலந்து கொண்டிருந்தது . இதைக் கண்ட நாஞ்சில் நாட்டு மக்கள் பரலை ஆற்று நீரை பழை ஆற்றுக்கு திருப்பிவிட்டால் எங்கள் பஞ்சங்கள் பறந்தோடி விவசாயம் செழிக்கும் என்று அப்போதைய நம் பாண்டியர் குலப் பேரரசரான இரண்டாம் இராசசிம்ம பாண்டியரிடம் கோரிக்கை விடுக்க மக்களின் அக்கோரிக்கையை ஏற்ற அரசர் இரு ஆறுகளையும் இணைக்கும் திட்டத்தை உருவாக்கினார் . அதன் படி கிபி. 7 ஆம் நூற்றாண்டில் இருபதடி உயரமுள்ள பெரும் பாறைகளை கொண்டு பழையாற்றின் குறுக்கே அணையை கட்டினார் . அதோடு மிகப்பெரிய பாறை குன்றுகளை குடைந்து கிட்டத்தட்ட பல மைல் தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு பழையாற்று நீர் பரலை ஆற்றுக்கு கொண்டு செல்ல பட்டது . அதன் பின்பு தான் நாஞ்சில் நாடு செழிப்பான நாடாக மாறியது . இதை பற்றிய தகவல்கள் திருவிதாங்கூர் ஆவண அறிக்கையில் இருக்கின்றன . ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாசனப் பொறியாளரான இருந்த ஆர்ஸ்லி இந்த கால்வாயை பற்றி பதிவு செய்கையில் பாண்டியன் வாய்க்கால்களை உருவாக்கியவர்களின் தொழில்நுட்பம் என்னை பிரமிக்க வைக்கிறது . இவர்களே எனது பாசன தொழில்நுட்ப ஆசான்கள் என்று பதிவு செய்திருக்கிறார். இந்த அணையை தொடர்ந்து பிற்கால பாண்டியர்கள் வே நாடு மன்னர்களால் பதிமூன்று தடுப்பணைகள் பழையாற்றில் கட்டப்பட்டன . இந்த அணைகள் அனைத்தும் பெரும் பாறைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து இணைப்பு பகுதியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி பெரும் வலிமையுடையதாக கட்டப்பட்டுள்ளது . இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நதிகளை இணைத்து ஆற்று நீரை பரிமாற்றம் செய்து நதி நீர் இணைப்பிற்கு அப்போதே பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றனர் நம் இனத்தவர் . அவர்களின் விஞ்ஞான வளர்ச்சியை என்னவென்று வியப்பது ! .
வாழ்கசேரர் சோழர்பாண்டியர் குலமான பார்க்கவ குலம் , வளர்கசேரர் சோழர்பாண்டியர் குலமான பார்க்கவ குலம் , வெல்கசேரர் சோழர்பாண்டியர் குலமான பார்க்கவ குலம்







No comments:

Post a Comment