Wednesday, 31 May 2017



                                                திருவேங்கட உடையான்



திருவேங்கட உடையான்,திருவேங்கடமுடையான்,திரு நின்ற உள ருடையான் , திருநின்றை உடையார்,உடையாரே,உடையார்,திருவேங்கட உடையார் என்று திருப்பதி வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் பல இடங்களில் பல கல்வெட்டுகளில் இப்படி இருக்கின்றன இவ்வளவு கூட்ட நெரிசலில் நான் பார்த்திருக்கிறேன் என்றால் இன்னும் எவ்வளவு இருக்கும் என்று எண்ணி பாருங்கள் நண்பர்களே
நம் சோழர் குலத்தின் பெருமையை பாருங்கள் :)
எங்கும் தமிழர்கள் தான் :)

ௐ நம சிவாய



ௐ நம சிவாய
ராஜேந்திர சோழ உடையார்

மன்னர்களுக்கெல்லாம் மன்னர் மாமன்னர் பேரரசர் மாவீரர் ராஜேந்திர சோழ உடையார் சோழ நாட்டின் ஒரு பகுதியான சித்தூர் மாவட்டத்தில் கட்டிய திருக்காளத்தி காளத்தியப்பர் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் சென்று தரிசித்தோம்
அதன் அருகில் உள்ள கண்ணப்ப நாயனார் கோவில் சென்றும் தரிசித்தோம்.
63 நாயன்மார்களில் ஒருவரான, "கண்ணப்பர்", தன் இரு கண்களையும், "கடவுள் குருடு ஆகி விட கூடாது" என்பதற்காக கடவுளுக்கு கொடுத்த தலம் என்ற பெருமை, இத்தலத்திற்கு உண்டு
மன்னர்களுக்கெல்லாம் மன்னர் மாமன்னர் பேரரசர் மாவீரர் ராஜேந்திர சோழ உடையார் கட்டிய திருக்காளத்தி காளத்தியப்பர் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள பல கல்வெட்டுகளிலும் ராஜாதி ராஜ உடையார் , ராஜ ராஜ உடையார், உடையார் மகன்,உடையார் மகள்,மலையமான் மகன்,மலையமான் மகள்,மலையன் மகள், உடையார் கிழவோன், உடையார் கிழவன் ,உடையார் , உடையாரே இருக்கின்றது
இன்னும் ஆராய்ந்தால் நம் சோழர் குல தகவல்கள் நிறைய கிடைக்கும் நண்பர்களே
நம் சோழர் குலத்தின் பெருமையை பாருங்கள்
வாழ்க சோழர் குலம் வளர்க சோழர் குலம் வெல்க சோழர் குலம்

Thursday, 18 May 2017


பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியாருக்கு உத்தம தலைவர் டாக்டர் அய்யா பாரிவேந்தர் அவர்கள் மாலை அணிவித்த பின்



13.5.2017 அன்று பெரிய பிராட்டி சோழப் பேரரசி செம்பியன் மாதேவியாரின் முப்பெரும் விழாவில் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியாருக்கு உத்தம தலைவர் டாக்டர் அய்யா பாரிவேந்தர் அவர்கள் மாலை அணிவித்த பின்


















    

        பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியார் அபிஷேகங்கள் செய்யபட்டு


13.5.2017 அன்று பெரிய பிராட்டி சோழப் பேரரசி செம்பியன் மாதேவியாரின் முப்பெரும் விழாவில் காலை நேர பூஜையில் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியார் அபிஷேகங்கள் செய்யபட்டு












    சோழப் பேரரசி செம்பியன் மாதேவியாரின் முப்பெரும் விழா டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி செம்பியன் மாதேவியாரை வணங்கும் காட்சி




13.5.2017 அன்று பெரிய பிராட்டி சோழப் பேரரசி செம்பியன் மாதேவியாரின் முப்பெரும் விழாவில் சோழர் குலத்தின் தலைவர் உத்தம தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் , அண்ணன் ஜெயசீலன் ,கிருஷ்ண மூர்த்தி ,வெங்கடேசன் குத்து விளக்கு ஏற்றி செம்பியன் மாதேவியாரை வணங்கும் காட்சி














பெரிய பிராட்டி சோழப் பேரரசி செம்பியன் மாதேவியாரின் முப்பெரும் விழா




13.5.2017 அன்று பெரிய பிராட்டி சோழப் பேரரசி செம்பியன் மாதேவியாரின் முப்பெரும் விழாவில் சோழர் குலத்தின் தலைவர் உத்தம தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் விழா மேடையில் அமர்ந்திருந்த காட்சி அருகில் அண்ணன் ஜெயசீலன்,வெங்கடேசன்,கிருஷ்ண மூர்த்தி,விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பலர்






















                                             

          பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியார்


                                                      

மன்னர்களுக்கெல்லாம் மன்னர் மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழ உடையார் புகழ் வாழ்க !!!
சோழர் குல வரலாற்றில் கண்டாரதித்த சோழ உடையாரின் மனைவியாகவும், உத்தம சோழ உடையாரின் தாயகவும், மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழ உடையாரின் பெரிய பாட்டியாகவும் தான் வாழ்ந்த 90 ஆண்டுகளில்
முதலாம் பராந்தகச் சோழ உடையார் (கி.பி.907–953)
கண்டராதித்த சோழ உடையார் 950–957
அரிஞ்சய சோழ உடையார் 956–957
ஆதித்த கரிகால சோழ உடையார்கி.பி. 957-969
சுந்தர சோழ உடையார் (இரண்டாம் பராந்தகச் சோழ உடையார்) (கி.பி.956–973)
(மதுராந்தக சோழ உடையார்) உத்தம சோழ உடையார் (கி.பி.970–985) 
ராசராச சோழ உடையார் கி.பி.985–1014)
இராசேந்திர சோழ உடையார் கி.பி. 1012-1044
முதலிய எட்டு சோழப்பேரரசர்களின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியார்
எட்டு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்
இவரை போல் வாழ்ந்த பேரரசி ஒருவரை உலகில் காண இயலாது.
முதலிய ஆறு சோழப்பேரரசர்களின் பேரரசை வழி நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் அமைத்து திருப்பணிகள் புரிந்தும், தமிழக கட்டடகலை வரலாற்றில் சிறந்து விளங்கியவரும் மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழ உடையாரை வளர்த்து ஆளாக்கியவர் செம்பியன் மாதேவி.
ராசராச சோழ உடையாரை பேரரசராகவும், கோவில் கட்டுமானம் செய்யும் படைப்பாளியாகவும், மக்களை நேசித்த பேரரசராகவும், ஆட்சியில் பல்வேறு சிறப்புகளை பெறுவதற்கு இவரின் வளர்ப்பு நிலையும், ராசராச சோழ உடையாரின் தமக்கை குந்தவை நாச்சியாரின் வளர்ப்பும் வழிகாட்டுதலும் காரணமாக விளங்கின.
பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியாரை போற்றும் விதமாக அரியலூர் மாவட்டம், செம்பியக்குடியில் ஐம்பொன்னால் 6 3/4 அடி உயரத்திலும் 1000 கிலோ எடையுடன் கூடிய பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியாரின் முழு உருவ சிலை 13.05.17 அன்று மாண்புமிகு அய்யா உயர் திரு டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பொற்கரங்களால் வைக்கப்பட்டது.
சோழ வம்சமே பார்க்கவகுல சமுதாயம்

Wednesday, 10 May 2017


ராஜேந்திர உடையாரின் கல்லறை


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவிலிருந்து முப்பது கி.மீ தொலைவில் இருக்கிறது நாட்டேரி என்ற அழகான கிராமம்.
நாட்டேரிக்குப் பக்கத்தில் பிரம்மதேசம் என்னும் ஊர். இந்த ஊரின் வெளிப்புறத்தில் பசுமையான வயல்வெளிக்கு மத்தியில் ஒரு செங்கல் கோபுர நுழைவாயிலின் எதிரில் இரண்டடுக்குக் கோபுரம் கொண்ட ஒரு பழங்காலக் கோயில் இருக்கிறது. பல நூற்றாண்டுகளைக் கடந்த அந்தக் கோயில் கட்டடம் கவனிப்பின்றிக் கிடக்கிறது. கைவிடப்பட்ட அநாதையைப் போல் நின்றுகொண்டிருக்கிறது
ராஜேந்திர உடையார் அநாதையா? அவருக்கு எண்ணற்ற உறவினர்கள் நாங்கள் இருக்கின்றோம்
வழித்தோன்றல்கள் நாங்கள் இருக்கின்றோம்
அந்தக் கோயில் கட்டடம் சாதாரணமான ஒன்றல்ல. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சோழப் பேரரசர் ராஜராஜ சோழ உடையாரின் மகன், ‘கங்கை கொண்ட சோழன்’ ‘கடாரம் கொண்டான்என்றெல்லாம் புகழப்பட்ட ராஜேந்திர உடையாரின் கல்லறைதான் அந்தக் கட்டடம்.
தற்போது அந்த இடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கண்டறிந்துள்ள இந்திய ஒன்றியத்தின் தொல்பொருள் துறை அதை அழிக்கத் திட்டமிடுகிறது.ராஜேந்திர சோழ உடையாரின் கல்லறை குறித்து நாட்டேரி கிராம மக்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் அதைமடவலத்துக் கோயில்என்றுதான் சொல்கிறார்கள். சிலர்கலெக்டர் எல்லாம் வந்து பார்த்துட்டுப் போனாங்களே அந்தக் கோயிலா?” என்று அடையாளப்படுத்துகிறார்கள். சிலர் இதைச் சந்திர மௌலீஸ்வரர் கோயில் என்கிறார்கள். மிக அரிதாக யாரேனும் ஒருவர்தான் ராஜேந்திர சோழ உடையாரின் சமாதி என்று சொல்கிறார்கள்.
ராஜேந்திர சோழ உடையார் தன்னுடைய எண்பதாவது வயதில் நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்தபோது இங்கே இறந்து விட்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த இடத்தைத் தொல்பொருள் துறை கையகப்படுத்தியிருந்தாலும் அதைப் பாதுகாப்பதற்கான முறையான ஏற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது. தொல்பொருள் பாதுகாப்புத் துறையிடம் கேட்கலாம் என்று சென்றால், இங்குள்ள தொல்பொருள் பாதுகாப்புத் துறை அலுவலகம் பெரும்பாலும் மூடியே கிடக்கிறது. தமிழர் அல்லாதவர்கள் எப்படி தமிழர்களின் தொன்மையை பாதுகாப்பார்கள்? வீர தமிழினத்தையே அழிக்கத் துடிக்கும் தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள் வீர தமிழர்களின் வரலாற்று சின்னங்கலையா விட்டு வைப்பார்கள்?
நம் குல வரலாற்றை மீட்டெடுப்போம்
ராஜராஜ சோழ உடையாருக்குப் பிறகு சோழப் பேரரசை ஆண்டவர்; தன் தந்தையுடன் பல களங்களில் பங்கேற்றவர். அனைத்து போர்களிலும் வெற்றி வாகை சூடியவர்.
ராஜேந்திர சோழ உடையார் என்கின்ற பெயரை கேட்டாலே எதிரிகள் குலை நடுங்குவர்
பண்டித சோழன்என எண்ணற்ற பெயர்களால் வரலாற்றில் புகழப்பட்டவர். இத்தனை பெருமைகள் பெற்ற ராஜேந்திர உடையாரின் கல்லறையை, அதைச் சுற்றி வாழும் கிராமத்து மக்களாலேயே அடையாளம் காண முடியாமல் அநாதையாகக் கிடக்கிறது. இதைப் பார்க்கும்போதுமன்னவன் ஆனாலும் மாடோட்டும் சின்னவன் ஆனாலும் மண்ணில் பிறந்தால் ஒரு நாள் மண்ணுக்கிரைதானே…” என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
எவ்வளவு சிறப்பான வாழ்க்கை என்றாலும் தனிமனித வாழ்வு என்பது எல்லைக்குட்பட்டது. ஆனால் வரலாறு அப்படி அல்ல. ராஜேந்திர சோழ உடையார் வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர். அவர் நினைவைப் போற்றுவது வரலாற்றை நினைவுகொள்வதாகவே அமையும். அரசு நிர்வாகமும் சமூகமும் இதை மனதில் கொள்ள வேண்டும்.
நம் பாரம்பரியத்தை நாம் தான் காப்பற்ற வேண்டும் ..
நம் சோழர் குல வரலாற்றை நாம் தான் மீட்க வேண்டும்
வாழ்க சோழர் குலம் வளர்க சோழர் குலம் வெல்க சோழர் குலம்